×
Saravana Stores

மீண்டும் மீண்டும் மாறும் கணிப்புகள்.. வானிலை மையத்திற்கு போக்கு காட்டும் ‘ஃபெங்கல்’ புயல்…

சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணிநேரத்தில் ‘ஃபெங்கல்’ எனப்படும் புயலாக வலுப்பெறுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலாக வலுப்பெறாது என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் இயற்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாளை பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. வலுவிழந்து கரையை கடக்கும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது புயலாகவே கரையை கடக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வானிலை மைய கணிப்புகளில் ‘ஃபெங்கல்’ புயல் போக்கு காட்டி வருகிறது. அவை பின்வருமாறு…

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (நவ.27) புயலாக வலுப்பெறும்.
-நவ.26, மதியம் 12 மணியளவில்

புயலாக உருவாவதில் தாமதம். அடுத்த 12 மணிநேத்தில் உருவாக வாய்ப்பு.
-நவ.27, இரவு 8 மணியளவில்

இன்று மாலை முதல் நாளை (நவ.29) காலை வரை தற்காலிக புயலாக மாறும்
-நவ.28, மதியம் 3 மணியளவில்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை. வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும்.
-நவ.28, இரவு 8 மணியளவில்

வலுவிழக்காமல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும்.
-நவ.29, காலை 8 மணியளவில்

புயலாக வலுப்பெற்று கரையை கடக்கும்
-நவ.29, காலை 11 மணியளவில்

The post மீண்டும் மீண்டும் மாறும் கணிப்புகள்.. வானிலை மையத்திற்கு போக்கு காட்டும் ‘ஃபெங்கல்’ புயல்… appeared first on Dinakaran.

Tags : Fengel ,CHENNAI ,BANGLADESH ,FENGAL ,Fengel' ,Dinakaran ,
× RELATED ஃபெஞ்சல் புயல் எதிரொலி: நாளை எந்தெந்த...