×

அரேபியக் கடலில் 2 படகுகளில் இருந்து 500 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல்..!!

டெல்லி: அரேபியக் கடலில் 2 படகுகளில் இருந்து 500 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலோர எல்லைப் பகுதிகளில் இந்தியாவிற்குள் போதைப்பொருள் கொண்டு வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும் எல்லை கடற்படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அதிக அளவிலான போதைப்பொருள் கடத்தல் தடுக்கப்பட்டு வருகிறது. அரசும் இதற்கான முழுவீச்சில் நடவடிக்கை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளது.

இந்நிலையில், அரபிக்கடலில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் இந்தியா மற்றும் இலங்கை கடற்படை இணைந்து நடத்திய ஆப்ரேஷன் நடத்தினர். அப்போது அவர்கள் இரண்டு படகுகளில் போதைப்பொருட்கள் கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர். அந்த படகுகளை சுற்றி வளைத்த கடற்படையினர் அவர்களிடம் இருந்து 500 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருளை கடத்திய 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் போதைப்பொருள் இலங்கை செய்யப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

The post அரேபியக் கடலில் 2 படகுகளில் இருந்து 500 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Arabian Sea ,Delhi ,India ,Dinakaran ,
× RELATED ஜோதிர்லிங்க தரிசனம்