×

செப்.1ல் வெளியாகிறது நடிகை சமந்தா நடித்துள்ள குஷி படம்; சாகுந்தலம் தோல்வியை சரி செய்யுமா?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நடிகை சமந்தா நடித்துள்ள குஷி படம் வருகிற செப்டம்பர் 1ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தில் அவர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கு தவிர தமிழிலும் வெளிவருகிறது. சமீபத்தில் இந்த படத்திற்காக மதன் கார்க்கி எழுதிய என் ரோஜா நீயே… என்கிற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சிவா நிர்வணா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தாவுடன், ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, ரோகிணி, வெண்ணலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹேப் இசையமைத்திருக்கிறார். இந்த படம் சாகுந்தலம் படத்தின் தோல்வியை ஈடு செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில வருடங்களாகவே சமந்தாவுக்கு உடல் ரீதியாவும், தொழில் ரீதியாகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post செப்.1ல் வெளியாகிறது நடிகை சமந்தா நடித்துள்ள குஷி படம்; சாகுந்தலம் தோல்வியை சரி செய்யுமா?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Samantha ,Sakundalam ,Khushi ,Vijay Devarakonda ,Madan Karki ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா