×

நெல்லையில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் தொடக்கம்

நெல்லை :  நெல்லை மாவட்டத்தில் 4.78 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை நெல்லையில் அப்துல்வகாப் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.தைப் பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை சென்னையில் நேற்று காலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இதைத் தொடர்ந்து, நெல்லை மாவட்டத்தில் 4 லட்சத்து 78 ஆயிரத்து 496 ரேஷன் கார்டுகளுக்கு ரூ.24.16 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் துவக்க விழா நெல்லை மகாராஜநகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ரேஷன் கடையில் கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்தது. மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சுபாஷினி முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அழகிரி வரவேற்றார். நிகழ்ச்சியில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல்வகாப், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஏஎல்எஸ் லட்சுமணன், நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் செந்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் குழந்தைவேலு, நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் (தரக் கட்டுப்பாடு) மணிகண்டன், பாளை தாசில்தார் ஆவுடையப்பன், வட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், முன்னாள் கவுன்சிலர் பாலன் என்ற ராஜா, பாளை. பகுதி செயலாளர் அண்டன் செல்லத்துரை, கணேஷ்குமார் ஆதித்தன், வக்கீல் அணி உமா மகேஸ்வரன், தகவல் தொழில்நுட்ப அணி நெல்லை தொகுதி ஒருங்கிணைப்பாளர் காசிமணி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். துணைப்பதிவாளர் லெட்சுமணகுமார் நன்றி கூறினார். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் தினமும் 100 முதல் 200  பேரின் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதை முன்னிட்டு வருகிற 7ம் தேதி ரேஷன் கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க ஆர்டிஓ, துணை கலெக்டர் அந்தஸ்தில் வட்ட அளவிலான கண்காணிப்பு குழுவும், தாசில்தார் நிலையில் குறு வட்ட அளவிலான கண்காணிப்புக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி 1வது வார்டு ஆர்எஸ் நகரில் 21 பொருட்கள் அடங்கிய தமிழக முதல்வரின் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தாழை கே.ஆர்.ராஜூ துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரகாஷ், ஆறுமுகம் என்ற மாலை, முருகாண்டி, குமார், திருநாவுக்கரசு, நாகராஜ், ஆறுமுகச்சாமி, மணி, மூர்த்தி, குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நெல்லை மாநகராட்சி 4வது வார்டுக்குட்பட்ட மேகலிங்கபுரம், உடையார்பட்டி பொதுமக்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்  முன்னாள் கவுன்சிலரும், நெல்லை மாநகர முன்னாள் இளைஞரணி திமுக அமைப்பாளருமான எஸ்.வி.சுரேஷ் தலைமையில் வழங்கப்பட்டது. இதில் ஐஸ் மூக்கன், வட்டச் செயலாளர் ராஜேந்திரன், கலை இலக்கிய அணி மாரியப்பன், தச்சை பகுதி துணை செயலாளர் பி.பி. ராஜா, வட்ட பிரதிநிதி மேகை செல்வம், தொ.மு.ச. சுடலைமணி, பேச்சிமுத்து, சிந்து துரை, சுந்தரவேலன், பொறியாளர் அணி ஆர்.எம்.சங்கர், குருநாதன், மும்பை குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்….

The post நெல்லையில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Pongal ,Paddy Paddy ,Abdulwakaab ,MLA ,Nelli ,Nelly ,Paddy ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையில் பொங்கல் கரும்பு சாகுபடி பணி