×

அம்பையில் வானவில் பாலின வள மையம் திறப்பு

அம்பை,நவ.29: அம்பை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வானவில் பாலின வள மையத்தை யூனியன் சேர்மன் பரணி சேகர் திறந்து வைத்தார். தொடர்ந்து பாலின வன்கொடுமை எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. பேரணியில் பாலின வன்கொடுமைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். பேரணியில் பிடிஓ பாப்பு, சத்துணவு மேலாளர் சிவா, சமூக நலத்துறை பேச்சியம்மாள், மகளிர் சுய உதவிக் குழு அமைப்பாளர் முத்துலட்சுமி, நந்தகுமார், சுகாதாரத்துறை கணேஷ்குமார், அங்கன்வாடி மேற்பார்வையாளர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அம்பையில் வானவில் பாலின வள மையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Vanavil Gender Resource Center ,Ambai ,Union Chairman ,Bharani Shekhar ,Rainbow Gender Resource Center ,Tamil ,Nadu Government Rural Livelihood Movement ,Panchayat Union ,
× RELATED சங்கரன்கோவிலில் அன்பழகன் பிறந்தநாள் விழா