×

போதை விழிப்புணர்வு பேரணி

நித்திரவிளை, நவ. 29: பூத்துறை இஸ்லாமிய நற்பணி மன்றம் சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மன்ற தலைவர் செய்யது அலி தலைமை தாங்கினார். சிறப்பு எஸ்.ஐ. நடராஜன் பேரணியை துவக்கி வைத்தார். தூத்தூர் ஊராட்சி தலைவர் லைலா, பூத்துறை பங்கு தந்தை பென்சிகர், பூத்துறை ஜமாஅத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான், இரையுமன்துறை டேவிட் குமார், மன்ற துணைத் தலைவர் ரபீக்கான் உட்பட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பேரணியானது பூத்துறை ஜமாஅத் வளாகத்தில் இருந்து புறப்பட்டு தெருவுமுக்கு வரை சென்றது.

The post போதை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : awareness ,Nithravila ,Putura Islamic Benevolent Society ,Ali ,SI ,Natarajan ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பட்டிமன்றம்