×

உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு டெல்லி தலைமை நீதிபதியை பரிந்துரைத்தது கொலிஜியம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சந்திரசூட், நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர் ஓய்வு பெற்றதால் 34 நீதிபதிகள் பணியிடம் கொண்ட உச்ச நீதிமன்றத்தில் தற்போது 2 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது. இதையடுத்து தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் நீதிபதிகள் பி ஆர் கவாய், சூர்யா காந்த், ஹிருஷிகேஷ் ராய், ஏஎஸ் ஓகா ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட கொலிஜியம் நேற்று கூடி ஆலோசனை நடத்தியது. அதில் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் ஒருமனதாக பரிந்துரை செய்தது.

The post உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு டெல்லி தலைமை நீதிபதியை பரிந்துரைத்தது கொலிஜியம் appeared first on Dinakaran.

Tags : Chief Justice of ,Delhi ,Supreme Court ,New Delhi ,Chief Justice ,Chandrachud ,Justice ,Hima Kohli ,
× RELATED வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக...