×

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிக்கு அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிக்கு அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 47 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில், துணை மேயர் மகேஷ் குமார் ஆணையர் குமரகுருபரன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மொத்தம் 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதில் முக்கிய தீர்மானங்கள் வருமாறு: சென்னை மாநகராட்சி சார்பில் தொடக்க மற்றும் உயர்நிலை மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 245 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 245 பள்ளிகளிலும் ரூ.8 கோடி செலவில் கேமராக்கள் பொருத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது தெரு நாய்களால் பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு புகார்கள் சென்னை மாநகராட்சிக்கு வருகின்றன. தற்போதைய கணக்கெடுப்பின்படி சென்னையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தெரு நாய்கள் உள்ளன. தெரு நாய்களின் இன விருத்தியை தடை செய்யும் வகையில் சென்னையில் மொத்தம் 5 இடங்களில் நாய்களுக்கான கருத்தடை மையங்கள் உள்ளன. இருந்த போதும் சென்னையில் கூடுதலாக மூன்று இடங்களில் கருத்தடை மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மண்டலங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்ற கணக்கெடுப்பின் அடிப்படையில் மூன்று மண்டலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 3, 7, 11 ஆகிய மண்டலங்களில் நாய்களுக்கான கருத்தடை மையங்கள் ரூ 2.6 கோடி செலவில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் துணை முதல்வர் உதயநிதிக்கு வாழ்த்து.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கின் வெளியே, மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதற்கு, சக கவுன்சிலருக்கு, பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் இனிப்பு வழங்கினார். அப்போது உடனடியாக அங்கிருந்த திமுக கவுன்சிலர் சொக்கலிங்கம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும்படி, பாஜக கவுன்சிலர் உமா ஆனந்துக்கு இனிப்பு வழங்கினார். உடனடியாக அவரும், உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

 

The post சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிக்கு அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றம்! appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Chennai ,Chennai Municipal Schools ,Municipal ,Council ,Mayor ,Priya ,Chennai Corporation Council ,
× RELATED சென்னை மாநகராட்சியில் சுகாதார...