×

சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை.. ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மசோதா..!!

ஆஸ்திரேலியா: சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் சிறார்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது. இதனால் சிறார்கள் மீதான வன்முறைகள், பாலியல் குற்றங்கள் பெறுக தொடங்கி இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறினர். இதையடுத்து 16 வயதுக்கும் குறைவான சிறார்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நேற்று சிறார்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் விரிவான விவாதத்திற்கு பிறகு பெரும்பான்மை எம்.பி.களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கும் கீழ் உள்ள சிறார்கள் டிக் டாக், ஸ்புக், ஸ்னாப் சாட், எக்ஸ் உள்ளிட்ட சமூக வளத்தங்களில் கணக்கு வைத்திருக்க சட்டபூர்வ தடை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. விதி மீறும் நிறுவனங்களுக்கு இச்சட்டத்தின் மூலம் சுமார் 250 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.

The post சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை.. ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மசோதா..!! appeared first on Dinakaran.

Tags : Australian Parliament ,Australia ,Dinakaran ,
× RELATED சிஎஸ்கே அணிக்காக என்னால் முடிந்தவரை விளையாடுவேன்: அஸ்வின் பேட்டி