×

துருப்பிடித்த குழாயால் வீணாகும் தண்ணீர்

திருச்செங்கோடு, நவ.28: திருச்செங்கோடு ஒன்றியம், கருவேப்பம்பட்டி ஊராட்சி அன்னை சத்யா நகர் 2வது வார்டில், மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து வரும் இரும்பு குழாய், கடந்த ஒரு மாத காலமாக துருப்பிடித்து விரிசல் ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post துருப்பிடித்த குழாயால் வீணாகும் தண்ணீர் appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Annai Satya Nagar 2nd Ward ,Karuveppampatty Panchayat ,Tiruchengode Union ,Dinakaran ,
× RELATED ₹2.15 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்