×

தேவதானப்பட்டி அருகே பாலின வள மையம் கட்டிடம் எம்எல்ஏ திறந்து வைத்தார்

தேவதானப்பட்டி, நவ.28: மாநில அரசின் கீழ் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் மூலம், பெரியகுளம், மயிலாடும்பாறை, தேனி ஆகிய மூன்று வட்டாரங்களில் வானவில் பாலின வள மையம் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. அதன்படி, பெரியகுளம் வட்டம், மேல்மங்கலம் பஞ்சாயத்தில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் புதிய வானவில் பாலின வள மையத்தின் கட்டிட திறப்பு விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் குத்துவிளக்கு ஏற்றி தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் (நகர்ப்புறம்) கங்கா கௌரி வாழ்த்துரை வழங்கினார். மேல்மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், பெரியகுளம் வட்டார இயக்க மேலாண்மை மேலாளர், அலுவலகப் பணியாளர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post தேவதானப்பட்டி அருகே பாலின வள மையம் கட்டிடம் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Gender ,Resource Center ,Devadanapatti ,State Government ,Vanavil Gender Resource Center ,Periyakulam ,Mayiladumparai ,Theni ,Periyakulam circle ,Mellamangalam ,Gender Resource Center building ,Dinakaran ,
× RELATED பெரியதாழையில் ரூ.62 லட்சத்தில்...