×

மண்டபம் பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரம்

மண்டபம்,நவ.28: மண்டபம் பேரூராட்சி பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த சாரல், கனமழையால் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் மழைநீர்கள் தேக்கம் அடைந்துள்ளது. மண்டபம் பேரூராட்சி பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தெருப்பகுதிகள் கடலோரப் பகுதிகளின் அருகே அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் கனமழை பெய்ததில் மழைநீர் வீடுகளில் தேக்கம் அடைந்தது. இந்த மழை நீரை பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் வாசிம் அக்ரம், முகமது மீராசாகிபு,முபாரக் ஆகியோர்கள் இணைந்து தண்ணீரை மின் இயந்திரம் மூலம் கடந்த நான்கு நாட்களாக கடலோரப் பகுதிக்கு அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மண்டபம் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், மழை நீரை மேற்கொண்டு வீடுகளை சுற்றி தேக்கம் அடைய விடாத அளவிற்கு மழை பெய்து வருவதை பொருட்படுத்தாமல் மழைநீரை கடல் பகுதிக்கு விடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post மண்டபம் பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு