×

மராட்டியத்தில் துணை முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ஏற்க மறுத்ததை அடுத்து அவரது மகனுக்கு வழங்க பாஜக ஆலோசனை!!

மும்பை: மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பா.ஜ கூட்டணி அபார வெற்றி பெற்றது. மொத்தம் 235 இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியது. இதில் பாஜ அதிகபட்சமாக 132 இடங்களை பிடித்தது. சிவசேனா 57, தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் ஜேஎஸ்எஸ்2, ஆர்எஸ்பிஎஸ்1, ஆர்எஸ்விஏ1, ஆர்ஒய்எஸ்பி 1 இடத்தில் வெற்றி பெற்றன. இருப்பினும் முதல்வராக யார் இருப்பது என்ற முடிவு எட்டப்படவில்லை.

ஷிண்டே முதல்வராக நீடிக்க வேண்டும் என சிவசேனா கட்சி தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். ஆனால், அதிக இடங்களை பாஜதான் கைப்பற்றியது என்பதால், பாஜவுக்குத்தான் முதல்வர் பதவி கிடைப்பது நியாயம் என பாஜ மேலிடம் கருதுகிறது. இதனால்தான் பட்நவிசை முதல்வர் ஆக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறது. அதற்காக முக்கிய துறைகள் தருவதாக பா.ஜ சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் முதல்வர் ஷிண்டே பிடிவாதத்தை விடுவதாக இல்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே மகாராஷ்டிரா சட்டப்பேரவை பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததால் ஷிண்டே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதற்கான கடிதத்தை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வழங்கினார். இந்த நிலையில், மராட்டியத்தில் துணை முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ஏற்க மறுத்ததை அடுத்து அவரது மகனுக்கு வழங்க பாஜக ஆலோசனை நடத்தி வருகிறது. பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் தான் மராட்டிய முதலமைச்சராக நியமிக்கப்பட்ட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.

இதுவரை முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் என்சிபியின் அஜித்பவாருக்கு துணைமுதல்வர் பதவி தர பாஜக திட்டம் வகுத்தது. துணை முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ஏற்க மறுத்ததால் அவரது மகள் ஸ்ரீகாத்துக்கு அப்பதவியை தர முன்வந்துள்ளது பாஜக. அத்துடன், 57 தொகுதிகளைக் கைப்பற்றிய சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி தர பாஜக ஆலோசனை நடத்தி வருகிறது.

The post மராட்டியத்தில் துணை முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ஏற்க மறுத்ததை அடுத்து அவரது மகனுக்கு வழங்க பாஜக ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Aknath Shinde ,Mumbai ,Maharashtra ,Jaya alliance ,Bajaj ,Sivasena ,Nationalist Congress ,
× RELATED மகாராஷ்டிராவில் இலாகா ஒதுக்கீடு...