×

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய தெலுங்கு நடிகர் மீது பலாத்கார வழக்கு

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் ஸ்ரீதேஜ் மீது ஐதராபாத் அடுத்த குகட்பள்ளி காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில், ‘நடிகர் ஸ்ரீதேஜூம் நானும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால், அவருடன் உல்லாசமாக இருந்தேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். என்னிடம் 20 லட்சம் ரூபாய் கேட்டார். என்னுடன் நெருக்கமாக இருந்தபோதிலும், அவர் மற்றொரு பெண்ணுடன் ஜாலியாக இருந்து வருகிறார். இதுகுறித்து கேட்டதற்கு எனக்கு மிரட்டல் விடுக்கிறார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். அதையடுத்து ஸ்ரீதேஜ் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே இந்தப் பெண் கடந்த ஏப்ரல் மாதம் ஸ்ரீதேஜ் மீது மாதாபூர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்திருந்தார். அவரது குடும்பத்தினர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அந்த புகாரை வாபஸ் பெற்றார். தற்போது ஸ்ரீதேஜ் மீது மீண்டும் புகார் அளித்துள்ளதால் தெலுங்கு திரைப்பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய தெலுங்கு நடிகர் மீது பலாத்கார வழக்கு appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Sritej ,Kukatpally ,Sridesh ,
× RELATED ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு...