×
Saravana Stores

ஆண்களுக்கு நவீன சிகிச்சை விழிப்புணர்வு பிரச்சார வாகனம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவாரூர், நவ. 27: திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிலிருந்து ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை முகாம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை கலெக்டர் சாரு துவக்கிவைத்தார். திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிலிருந்து ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை முகாம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை கலெக்டர் சாரு கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆண்களுக்கான நவீன தழும்பிலாத குடும்ப நல சிகிச்சை முகாம் அடுத்த மாதம் (டிசம்பர்) 4ந் தேதி வரை நடைபெற்று வருகிறது.

இம்முகாம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனமானது இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இம்முகாமில் கலந்துகொண்டு தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை பெற்று கொள்பவருக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.ஆயிரத்து 100- வழங்கப்படுகிறது. குடும்ப நல சிகிச்சையானது மிக மிக எளியது மற்றும் பாதுகாப்பானது. இந்நவீன குடும்ப நல சிகிச்சையானது நன்கு பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் செய்யப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் குடும்ப நலம் துணை இயக்குநர் (பொ) உமா, மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் பன்னீர்செல்வம், புள்ளி விவர உதவியாளர் நதியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post ஆண்களுக்கு நவீன சிகிச்சை விழிப்புணர்வு பிரச்சார வாகனம்: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Collector ,Saru ,Tiruvarur district ,Dinakaran ,
× RELATED வரும் 28ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்