×

இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர், நவ.27: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆத ர்ஷ் பசேரா தலைமையில் போலீசார் இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) அல்லது சட்ட தினம் (Law Day) எனப்படும் நவ.26 ஆம்தேதி, 2015 நவம்பர் 26 முதல் இந்திய அரசியல மைப்பின் முக்கியத் துவத்தை வலியுறுத்தும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான, நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப் படுவதாக அறிவிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று பெர ம்பலூர் மாவட்டத்தில் மாவட்டஎஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழியை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் போலீசார் மற்றம் அமைச்சுப் பணியார்கள் ஆகியோர் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், பாடாலூர், குன்னம், மங்களமேடு, அரும்பாவூர், கை.களத்தூர், வி.களத்தூர், மருவத்தூர், பெரம்பலூர் மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்,மாவட்டமது விலக்கு அமலாக்கப் பிரிவு, மாவட்ட சைபர் கிரைம், டவுன் ட்ராபிக், ஹைவே டிராபிக் உள்ளிட்ட அனை த்து காவல் நிலையங்கள், ஆயுதப்படை மற்றும் காவ ல்துறையி னரின் அலுவலங் களில் இவ்வுறுதிமொழியானது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

The post இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Indian Constitution Day ,Perambalur ,Perambalur District ,SP ,Aadhar Basera ,Indian Constitution Day Pledge ,Constitution Day of India ,Law Day ,Constitution Day ,Dinakaran ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு