×

கியாஸ் கசிவால் வீட்டில் தீ விபத்து

 

சிவகாசி, நவ.27: சிவகாசி அருகே வீட்டில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதில் வீட்டின் உரிமையாளர் காயம் அடைந்தார். சிவகாசி அருகே நதிக்குடியை சேர்ந்தவர் வீரப்பன்(45). இவர் தனது வீட்டின் சமையல் அறையில் இருந்த கியாஸ் அடுப்பை பயன்படுத்திய போது சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு திடீரென தீ பிடிக்க தொடங்கியது. இதில் வீரப்பன் உடலில் தீக்காயம் ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது. இதில் காயமடைந்த வீரப்பன் கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தீ விபத்து குறித்து மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post கியாஸ் கசிவால் வீட்டில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Veerappan ,Nadikudi ,Dinakaran ,
× RELATED சுற்றுலாத்துறை சார்பில் மலையாளப்பட்டியில் கிராமிய பொங்கல் விழா