×

நீர் பனியால் குளிர் வாட்டுகிறது

 

மஞ்சூர், நவ.27: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் கடந்த ஜூன் மாதம் துவங்கி தொடர்ந்து பரவலாக மழை பெய்து வந்தது. தொடர் மழையின் காரணமாக தேயிலை மற்றும் மலை காய்கறி விவசாயம் செழிப்படைந்தது. தற்போது கடந்த சில தினங்களாக நீர் பனிப்பொழிவு துவங்கியுள்ளது. குந்தா பகுதியை பொருத்த மட்டில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்கு பின்னரே பனி விழத்துவங்கும்.

டிசம்பர் மாத இறுதி மற்றும் ஜனவரி மாதங்களில் உறை பனி கொட்டுவது வழக்கம். நடப்பாண்டு முன்னதாகவே பனி கொட்ட துவங்கியது. பெரும்பாலும் மாலை 3 மணிக்கெல்லாம் பனி விழத்துவங்கி இரவு முழுவதும் நீடிக்கிறது. இதனால் இரவு நேரத்தில் குளிர் அதிகரித்துள்ளது. மேலும் காலை நேரத்தில் பனியால் புல்வெளிகள், செடி, கொடிகளில் பனி நீர் கோர்த்து காணப்படுகின்றன. வரும் நாட்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

The post நீர் பனியால் குளிர் வாட்டுகிறது appeared first on Dinakaran.

Tags : Manjoor ,Gunda ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED மஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தில் காட்டுமாடுகள் முகாம்