×

ரூ.27.34 கோடியில் மேம்படுத்தப்பட்ட ஒகேனக்கல் அருவி பகுதி உள்பட 7 சுற்றுலா தலங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ரூ.27.34 கோடியில் மேம்படுத்தப்பட்ட ஒகேனக்கல் அருவி பகுதிகள், கொல்லிமலை உள்ளிட்ட 7 சுற்றுலாத் தலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுற்றுலாத் துறையின் 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளுக்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிப் பகுதிகளை முழுமையான சுற்றுலாதலமாக மேம்படுத்திட ரூ.17 கோடியே 57 லட்சத்து 65 ஆயிரம் செலவில் நுழைவாயில் வளைவு, கழிப்பறைகள், நுழைவுச் சீட்டு வழங்குமிடம், உணவகம், படகு தளம், பார்வை மேடை, மசாஜ் செய்யும் இடம்,

குளியலறைகள், உடை மாற்றும் அறைகள், ஆழ்துளை கிணறு போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள், வத்தல்மலை பகுதியில் ரூ.2 கோடியே 23 லட்சம் செலவில் நில சீரமைப்பு, வாகன நிறுத்துமிடம், நுழைவாயில் வளைவு, உணவகம், வரவேற்பறை, ஆழ்துளை கிணறு போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள், நாமக்கல் மாவட்டம், கொல்லி மலையை முக்கிய சுற்றுலாதலமாக மேம்படுத்திடும் வகையில் ரூ.2 கோடியே 22 லட்சத்து 86 ஆயிரம் செலவில் நுழைவாயில் வளைவு, வாகன நிறுத்துமிடம், நடைபாதை,

கழிப்பறைகள், சாகச மற்றும் சுற்றுலா வசதிகள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள், திருப்பூர் மாவட்டம், ஆண்டிபாளையம் ஏரியில் ரூ.1 கோடியே 47 லட்சத்து 4 ஆயிரம் செலவில் நிலசீரமைப்பு, சாலை மற்றும் நடைபாதை, மின்சாரப் பணிகள், கண்காணிப்பு கேமராக்கள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள், கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் கடற்கரையில் ரூ.2 கோடியே 84 லட்சத்து 7 ஆயிரம் செலவில் பார்வையாளர்கள் மாடம், குழந்தைகள் விளையாடுமிடம், சென்ட்ரல் பிளாசா, நுழைவுச்சீட்டு வழங்குமிடம்,

தகவல் பலகை, சிற்பங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள், ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஏரியை சுற்றுலாதலமாக மேம்படுத்திட ரூ.50 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட நடைபாதை, நிலச்சீரமைப்பு, படகுதளம், ஆழ்துளை கிணறு, மின்சாரப் பணிகள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள்,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, ஹரித்ராநதி கோயில் குளத்தை மேம்படுத்திட 50லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட நடைபாதை, நிலச்சீரமைப்பு, படகுதளம், ஆழ்துளை கிணறு போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள் என மொத்தம் ரூ.27 கோடியே 34லட்சத்து 62 ஆயிரம் செலவில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலங்களை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

The post ரூ.27.34 கோடியில் மேம்படுத்தப்பட்ட ஒகேனக்கல் அருவி பகுதி உள்பட 7 சுற்றுலா தலங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Okanagan Falls ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Okenakal Falls ,Kollimalai ,Tamil Nadu Tourism Department ,
× RELATED கேரளாவின் வரவேற்பு மிகுந்த...