×

மழை நிலவரத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வழுபெற்று சென்னை -நாகை இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், புயல் மழையை சமாளிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியதாவது ,
புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மழை நிலவரத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மாவட்டங்களில் மழை பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி உள்ளார். அதில் புயல் முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் ஆலோசனைகளை வழங்கி உள்ளார். ஏரிகளில் நீரை சேமிக்கவும் தேவைப்பட்டால் திறந்து விடவும் அறிவுறுத்தியுள்ளார். நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

The post மழை நிலவரத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,K. K. S. S. ,R Ramachandran ,Chennai ,Gulf of Bengal ,Puducherry ,Nagai ,Tamil Nadu ,Mayiladuthura ,Thiruvarur ,K. K. S. S. R Ramachandran ,
× RELATED மழையைக் கண்டு அச்சம் வேண்டாம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்