×

நாசி வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தின் 3ம் கட்ட சோதனைக்கு ஒன்றிய அரசு அனுமதி: நெறிமுறைகளை தாக்கல் செய்ய உத்தரவு..!!

டெல்லி: இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசி வழி செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாவது கட்ட ஆய்வுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி மருந்து ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். கோவாக்சின் பரவலாக வரவேற்பு பெற்றுள்ள நிலையில், உள்நாசி வழியே செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்த பாரத் பயோடெக் அதனை இரண்டு கட்டமாக சோதனைக்கு உட்படுத்தியது. இந்த மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைக்கு அனுமதி அளிக்குமாறு இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்திடம் பாரத் பயோடெக் கோரியிருந்தது. இதுகுறித்து பரிசீலனை செய்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்தின் நிபுணர் குழு, நாசி வழியே செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாவது கட்ட ஆய்வுக்கு கொள்கை அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் பூஸ்டர் தவணை குறித்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வுக்கும் பாரத் பயோடெக்கிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒப்புதலுக்கான நெறிமுறைகளை வழங்குமாறு அந்நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் உத்தரவிட்டுள்ளது. …

The post நாசி வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தின் 3ம் கட்ட சோதனைக்கு ஒன்றிய அரசு அனுமதி: நெறிமுறைகளை தாக்கல் செய்ய உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Delhi ,India ,Bharat Biotech ,Dinakaran ,
× RELATED மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய...