திண்டுக்கல், நவ. 26: திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவிகள் விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தடகளம், கூடைப்பந்து மற்றும் கால்பந்து விளையாட்டில் மொத்தம் 65 மாணவிகள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சி பெற்று வரும் மாணவிகளுக்கு அரசு சார்பில் ஸ்மார்ட் வாட்ச், தொப்பி, பை, மீண்டும் பயன்படுத்தக் கூடிய முதலுதவி ஐஸ் பை, தண்ணீர் பாட்டில், துண்டுகள் ஆகிய பொருட்கள் உள்ளடக்கிய சாம்பியன்ஸ் கிட் தலைமையிடத்தில் இருந்து பெறப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் பூங்கொடி விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு சாம்பியன்ஸ் கிட் வழங்கினார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா மற்றும் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.
The post திண்டுக்கல்லில் விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு சாம்பியன்ஸ் கிட் appeared first on Dinakaran.