×
Saravana Stores

திருமண ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை

மார்த்தாண்டம், நவ.26: மார்த்தாண்டம் அருகே முளங்குழி குன்னுவிளையை சேர்ந்தவர் அனில் குமார்(36) வெல்டிங் தொழிலாளி. இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் மன விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அனில்குமார் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று அனில் குமாரின் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமண ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Anil Kumar ,Mulankuzhi ,Kunnuvilai ,Anilkumar ,
× RELATED முதுகுவலி சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் பலாத்காரம்: மருத்துவர் அதிரடி கைது