×

ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழா ராகுல், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 56 தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி வெற்றி பெற்றது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியானது 24 இடங்களை மட்டுமே பிடித்தது. இந்தியா கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக ஒரு மனதாக ஹேமந்த் சோரன் நேற்றுமுன்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆளுநர் சந்தோஷ்குமாரை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார். ஆளுநரின் அழைப்பை தொடர்ந்து ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கிறார்.

நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடக்கிறது. இதில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 4 தொகுதிகளிலும் வென்றது. அமைச்சர் பதவியை பொறுத்தவரை வெற்றி பெறும் ஒவ்வொரு நான்கு இடங்களுக்கும் ஒரு அமைச்சர் பதவி என்ற அடிப்படையில் 16 தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 4 அமைச்சர் பதவியும்,4 இடத்தை கைப்பற்றிய ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு ஒரு அமைச்சர் பதவியும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

The post ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழா ராகுல், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,CM Inauguration Ceremony ,Rahul ,India Alliance ,Ranchi ,Mukti Morcha ,Congress ,Rashtriya Janata Dal alliance ,Jharkhand assembly ,Jharkhand Mukti Morcha alliance ,BJP ,CM ,India ,Dinakaran ,
× RELATED தேர்வாணைய தேர்வில் முறைகேடு...