×

நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா இன்று தொடக்கம்: டிச. 3ல் நிறைவு

நாகர்கோவில்: நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாகர்கோவில் கோட்டாரில் உள்ள கேட்ட வரம் தரும் புனித சவேரியார் பேராலய திருவிழா இன்று (24ம்தேதி) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 3ம் தேதி வரை திருவிழா நடக்கிறது. திருவிழா நாட்களில் தினசரி காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறுகின்றன.

8ம் திருவிழாவான டிசம்பர் 1ம் தேதி காலை 6.15க்கு திருப்பலி நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.30க்கு ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. பின்னர் அன்று இரவு 10.30 மணிக்கு தேர் பவனி நடைபெறுகிறது. 9ம் திருநாளான டிசம்பர் 2ம் தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. இதில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை வகித்து ஆசி வழங்குகிறார். தொடர்ந்து அன்று இரவு 10.30க்கு 2ம் நாள் தேர் பவனி நடக்கிறது.

10ம் திருநாளான டிசம்பர் 3ம் தேதி செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் பெருவிழாத் திருப்பலியும், 8 மணிக்கு மலையாள திருப்பலி நடக்கிறது. அன்று காலை 11 மணிக்கு தேர்பவனி நடைபெறும். அன்று இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறும். தேர் பவனியின் போது தேருக்கு பின்னால் பக்தர்கள் விழுந்து கும்பிடு நமஸ்காரம் செய்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.

உப்பு, மெழுகுவர்த்தியும் காணிக்கையாக வழங்குவார்கள். சவேரியார் பேராலய திருவிழாவையொட்டி டிசம்பர் 3ம் தேதி, குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை ஆகும். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பேராலய பங்கு தந்தை பஸ்காலிஸ், உதவி பங்கு தந்தை ஷாஜன் செசில், பங்கு பேரவை துணைத்தலைவர் ஜேசுராஜா, பங்கு பேரவை செயலாளர் ராஜன், துணை செயலாளர் ராஜன் ஆராச்சி, பொருளாளர் ஜார்ஜ் பிரகாஷ் ராபின் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

The post நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா இன்று தொடக்கம்: டிச. 3ல் நிறைவு appeared first on Dinakaran.

Tags : festival of the Holy Saviour Palace in Kotar in Nagarko ,NAGARGO ,FESTIVAL OF THE HOLY SAVERIAR PALACE ,KOTAR ,Holy Saverian Palace Festival ,Nagarko ,
× RELATED கன்னியாகுமரியில் ‘ கடல் நீச்சல் குளம்...