×

வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் நிதான ஆட்டம்

நார்த் சவுண்ட்: வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட்டின் முதல் நாளில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 விக்கெட் இழப்புக்கு 250 ரன் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆன்டிகுவாவில் உள்ள நார்த் சவுண்டில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்குமுதல் டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய வெஸ்ட் இண்டீசின் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் கிரெய்க் பிரத்வைட் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேசி கேர்டி, டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதனால் 15.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 25ரன் என்ற பரிதாப நிலையில் வெஸ்ட் இண்டீஸ் இருந்தது.

பின்னர் வந்த கேவெம் ஹோட்ஜ் 25 ரன்னில் ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அடுத்து இணை சேர்ந்த மைக்லி லூயிஸ், அலிக் ஆதனஸ் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ஸ்கோர் உயர உதவினர். சதத்தை நெருங்கிய இருவரும் முறையே 97, 90 ரன்னில் ஆட்டமிழந்து, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர். இவர்கள் 4வது விக்கெட்டுக்கு 140 ரன் ரே்த்தனர். அடுத்த சில ஓவர்களில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது வெ.இ. 84 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 250ரன் எடுத்திருந்தது. ஜஸ்டின் கிரெவேஸ் 11, ஜோஷ்வா டி சில்வா 14 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.வங்கத்தின் டஸ்கின் அஹமது 2, தைஜூல் இஸ்லாம் 1, மெஹிதி ஹஸன் மிராஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

The post வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் நிதான ஆட்டம் appeared first on Dinakaran.

Tags : West Indies' ,Bangladesh ,North ,West Indies ,Dinakaran ,
× RELATED டி20 தொடரை வென்ற வங்கதேசம் பழிக்கு பழி! 3வது போட்டியிலும் வெ.இ. படுதோல்வி