×

ஐஎஸ்எல் கால்பந்து லீக் சுற்று கேரளா – சென்னை மோதல்

கொச்சி: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் லீக் சுற்று ஆட்டத்தில் இன்று கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி – சென்னையின் எப்சி அணிகள் மோதுகின்றன. கொச்சியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் கேரளா இனி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களம் காணுகிறது. அந்த அணி இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில் 2ல் மட்டுமே வென்றுள்ளது. 2 ஆட்டங்களில் டிராவும், 4 ஆட்டங்களில் தோல்வியும் சந்தித்துள்ளது. அதனால் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 10வது இடத்தில் பின் தங்கி உள்ளது. அதே நேரத்தில் சென்னை 8 ஆட்டங்களில் 3ல் வெற்றி பெற்றுள்ளது. தவிர, 3 டிரா, 2ல் தோல்விகளை பெற்றுள்ளது. எனவே 12 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. மேலும் அரையிறுதி வாய்ப்பும் சென்னை அணிக்கு நீடிக்கிறது. அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள சென்னைக்கும் வெற்றிகள் அவசியம்.

The post ஐஎஸ்எல் கால்பந்து லீக் சுற்று கேரளா – சென்னை மோதல் appeared first on Dinakaran.

Tags : ISL Football League Round Kerala ,Chennai Clash ,Kochi ,Kerala Blasters FC ,Chennaiyin FC ,ISL football ,Kochi, Kerala ,Dinakaran ,
× RELATED இயந்திர கோளாறு – விமானம் அவசரமாக தரையிறக்கம்