×

மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் மறுசீரமைப்பு: ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தை மறுசீரமைப்பு செய்ய ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில சுற்றுச்சூழல், கால்நிலை மாற்றத்துறை செயலாளர் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கடலோர மேலாண்மை திட்டம் தொடர்பான விதிகளை அமல்படுத்துவது உள்ளிட்ட பணிகளை ஆணையம் மேற்கொள்ளும். ஆணையம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் வகையில் தனியாக ஒரு இணையதளத்தை உருவாக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. ஆணையத்தின் செயல்பாடு தொடர்பான விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றவும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

The post மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் மறுசீரமைப்பு: ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : State Coastal Zone Management Authority ,Union Govt. Delhi ,Union Government ,Tamil Nadu State Coastal Zone Management Authority ,State Environment and Climate Change Department ,State Coastal Zone Management Commission ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் மரகத பூங்காவில் ஒளிரும்...