×

அடர்ந்த காட்டுக்குள் அகத்தியரை தேடி புனிதப்பயணம்: ஜன. 6ம் தேதி முன்பதிவு தொடங்குகிறது

திருவனந்தபுரம்: நெல்லை மாவட்டம், பாபநாசம் மலைக்கு மேல் முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில், பொதிகை மலையின் உச்சியில் கடல் மட்டத்திலிருந்து 6,132 அடி உயரத்தில் அகத்தியர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு புனிதப்பயணம் செல்ல வருடந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வனப்பகுதி கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக திருவனந்தபுரத்தில் உள்ள வன உயிரின காப்பக அலுவலகத்தில் முன்பதிவு செய்து திருவனந்தபுரம் அருகே உள்ள போணக்காடு வழியாகத் தான் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்பின்னர் ஆன்லைன் முன்பதிவு வசதி தொடங்கப்பட்டது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு வரும் 6ம் தேதி தொடங்குகிறது. புனிதப் பயணம் செல்ல விரும்புவர்கள் கேரள வனத்துறையின் www.forest.kerala.gov.in அல்லது serviceonline.gov.in/trekking என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி 6ம் தேதி காலை 11 மணிக்கு முன்பதிவு தொடங்கும். ஒரு நபருக்கு கட்டணம் ₹1331 ஆகும்….

The post அடர்ந்த காட்டுக்குள் அகத்தியரை தேடி புனிதப்பயணம்: ஜன. 6ம் தேதி முன்பதிவு தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Agathiyar ,Thiruvananthapuram ,Nellai District ,Mundanthura Tiger Reserve Forest ,Papanasam Hill ,Potikai Hill ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!