×

பொறையார் கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா

 

செம்பனார்கோயில், நவ.23: மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் கிளை நூலகத்தில் 57-வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி புதிய நூல்கள் கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெற்றனர். தொடர்ந்து வாசகர்கள் மற்றும் மாணவ மாணவிகள் நூலகத்தில் உள்ள புத்தகங்களை படித்து வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்திக் கொண்டனர். முன்னதாக 44-வது புரவலராக ஆசிரியர் ஜான் ரூபன் ஜெயகுமார், ரூ.1000ம் செலுத்தி தன்னை இணைத்துக் கொண்டார். பொறையார் ஆண்டவர் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 10 பேர் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் முன்னிலையில் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். புரவலராக இணைந்த ஆசிரியருக்கும், உறுப்பினர்களாகச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கும் வாசகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

The post பொறையார் கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா appeared first on Dinakaran.

Tags : National Library Week Festival ,Boraiyar Branch Library ,Cempanarkoil ,57th National Library Week Festival ,Pariyar Branch Library ,Mayiladuthura District ,Dinakaran ,
× RELATED கிளை நூலகத்தின் 57வது தேசிய நூலக வார...