×
Saravana Stores

கோழி வளர்ப்பு பயிற்சி

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஏனாத்தூர் உழவர் பயிற்சி மையம் சார்பில் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட 61 ஊராட்சிகளில் உள்ள நூறு பெண்களுக்கு கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் வாலாஜாபாத் பிடிஒ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் திருமாறன் தலைமை தாங்கினார்.

இதில், நாட்டுக்கோழி வளர்ப்பு முறை மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து விளக்கி கூறினர். இதனை தொடர்ந்து, முகாமில் 50 சதவீத மானியத்தில் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட 61 ஊராட்சிகளை சார்ந்த தலா 100 பெண்களுக்கு 40 நாட்டுக்கோழி குஞ்சுகளை வழங்கினர். இந்த பயிற்சி முகாமில் கால்நடை மருத்துவர்கள் பிரேமாவள்ளி, ஜெய் ஆனந்த், சம்பூரணம், ஆல்பர்ட் உள்ளிட்ட கால்நடைத்துறை அலுவலர்கள் மற்றும் கிராமப்புற பெண்கள் கலந்து கொண்டனர்.

The post கோழி வளர்ப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Walajabad ,Walajabad PTO ,Walajabad Union ,Kanchipuram Animal Husbandry Department ,Enathur Farmers Training Center ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED வாலாஜாபாத் அடுத்த சேர்க்காடு...