×

57வது தேசிய நூலக வார நிறைவு விழா வாக்காளர் பெயர் திருத்த முகாம் சிறப்பு விழிப்புணர்வு பேரணி

 

கரூர், நவ. 23: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளும் வகையில் நான்கு வாரங்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. ஏற்கனவே, நவம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் இரண்டு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. நவம்பர் 23 மற்றும் 24ம்தேதி என இரண்டு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

இதனை வலியுறுத்தும் வகையில் கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கோட்டாட்சியர் முகமது பைசல், துவக்கி வைத்தார். மேலும், டிஎஸ்பி செல்வராஜ், தாசில்தார் குமரேசன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி பல்வேறு பகுதிகளின் வழியாக கரூர் தாலுகா அலுவலகம் வரை சென்றடைந்தது.

The post 57வது தேசிய நூலக வார நிறைவு விழா வாக்காளர் பெயர் திருத்த முகாம் சிறப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : 57th National Library Week Closing Ceremony Voter Name Correction Camp Special Awareness Rally ,Karur ,Dinakaran ,
× RELATED பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும்...