கீவ்: ரஷ்யா நடத்திய புதிய ஏவுகணை தாக்குதலால் உக்ரைன் நாடாளுமன்ற கூட்டம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போரில் வெளிநாட்டு ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக கண்டம் விட்டு கண்டம் தாக்கும் புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யா அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் உக்ரைன் நாடாளுமன்றம் நேற்று கூடுவதாக இருந்தது.
ரஷ்யா புதிய ஏவுகணை தாக்குதல் நடத்துவதால் அந்த அச்சுறுத்தல் காரணமாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டதாக உக்ரைன் எம்பிக்கள் தெரிவித்தனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அலுவலகம் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுவருவதால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
The post ரஷ்யா புதிய ஏவுகணை தாக்குதல் உக்ரைன் நாடாளுமன்ற கூட்டம் திடீர் ரத்து appeared first on Dinakaran.