×

4 பேர் பணி நீக்கம்: பைப் உற்பத்தி ெதாழிற்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் பைப்புகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில்  உள்ளூர்காரர்கள் முதல் வடமாநில இளைஞர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில், பணியாற்றிவரும் நிலையில் சில தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிகிறது. . இதை கண்டித்து கடந்த 2 மாதங்களுக்கு முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், வட்டாட்சியர் மகேஷ் ஆகியோர் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி மீண்டும் பணியில் அமர்த்தினர்.இந்தநிலையில் எளாவூர் பகுதியை சேர்ந்த சம்பத், செல்வம், மோகன், சரவணன், ஆகியோர் நேற்று காலை வேலைக்கு வந்துள்ளனர். அப்போது நிர்வாகம் தரப்பில் ‘’ உங்கள் பணிக்காலம் டிசம்பர் 31ம்தேதியுடன் முடிந்துவிட்டது’ என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் 50க்கும் மேற்பட்டவர்கள் தொழிற்சாலை முன்பு கண்டன கோஷங்கள் எழுப்பியபடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்பாக்கம் போலீசார் மற்றும் வட்டாட்சியர் மகேஷ் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தைநடத்தினர். அப்போது பீஸ் கமிட்டி அமைத்து முடிவெடுக்கலாம் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது….

The post 4 பேர் பணி நீக்கம்: பைப் உற்பத்தி ெதாழிற்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kummhipundi ,North State ,Elavur ,Gummhipundi ,Dinakaran ,
× RELATED மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை...