×

ராஜஸ்தானில் தமிழ்நாட்டு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு: வீரர்கள் போட்டியில் தொடர்ந்து கலந்து கொள்வது குறித்து அச்சம்

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் நடைபெறும் இந்திய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க சென்ற தமிழ்நாட்டு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தானில் நடைபெறும் இந்திய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்பதற்காக தென் இந்தியாவில் இருந்து 4 அணிகள் சென்றுள்ளன. சென்னையில் இருந்து தனியார் பல்கலைக்கழகம் சார்பாக கல்லூரி மாணவர்கள் சென்று இருந்தனர்.

போட்டியின் போது தமிழ்நாட்டு வீரர்களுக்கு சரியான பாயிண்ட்களும், போனஸ்களும் வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இது குறித்து தமிழ்நாட்டு வீரர்கள் கேள்வி எழுப்பிய போது நடிகர்கள் முன்னிலையில் வீரர்களையும், பயிற்சியாளர்களையும் ராஜஸ்தான் வீரர்கள் தாக்கி உள்ளனர். தமிழ்நாட்டு வீரர்கள் தொடர்ந்து போட்டியில் கலந்து கொள்வது குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர்.

The post ராஜஸ்தானில் தமிழ்நாட்டு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு: வீரர்கள் போட்டியில் தொடர்ந்து கலந்து கொள்வது குறித்து அச்சம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Rajasthan ,Nadu ,-scale ,Kabaddi tournament ,South India ,-level ,Chennai ,Dinakaran ,
× RELATED போதையில்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில்...