×

பெர்த்தில் துவங்கியது யுத்தம்..! பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

பெர்த்: பெர்த்தில் துவங்கியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. பெர்த் பிட்சில் இதுவரை நடைபெற்ற 4 டெஸ்ட் போட்டிகளிலும், டாஸ் வென்று முதலில் களமிறங்கிய அணிகள்தான் வென்றிருக்கிறது. முதல் இன்னிங்ஸ் பேட்டர்களுக்கு சாதகமாகவும், போகபோக பௌலர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால்தான், முதலில் பேட்டிங் செய்த அணிகள் இங்கு வென்றிருக்கிறது. டாஸ் வென்றப் பிறகு பேசிய ஜஸ்பரீத் பும்ரா, ”முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். பிட்ச் துவக்கத்தில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் எனத் தெரிகிறது.

நாங்கள் மிகவும் உறுதியுடன் இருக்கிறோம். 2018ஆம் ஆண்டில் இங்கு டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கிறோம். இதனால், இங்கு என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். நிதிஷ் ரெட்டி இன்று அறிமுக வீரராக களமிறங்குகிறார். வாஷிங்டன் சுந்தர் மட்டுமே ஸ்பின்னராக இருப்பார்” எனக் கூறினார். ஆஸ்திரேலிய அணியில் நாதன் மெக் ஸ்வீனி இன்று அறிமுக வீரராக மிடில் வரிசையில் களமிறங்க உள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், இந்தியா 4-0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு நேரடியாக முன்னேற முடியும். ஒரு போட்டியில் தோற்றாலும் கூட, மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளின் அடிப்படையில்தான், இந்தியாவுக்கு பைனல் வாய்ப்பு இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்திய அணி: கே.எல்.ராகுல், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பந்த், துரூவ் ஜோரல், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்பரீத் பும்ரா, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலிய அணி: உஸ்மான் கவாஜா,நாதன் மெக் ஸ்வீனி, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலேக்ஸ் ஹேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லைன், ஜோஸ் ஜேசில்வுட்.

The post பெர்த்தில் துவங்கியது யுத்தம்..! பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Perth ,Border ,Kawasaki Test series ,Perth Pitch ,Border—Kawasaki Test series ,Dinakaran ,
× RELATED இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் பாக்சிங்...