×

தேசிய நூலக வார விழா

 

சிவகங்கை, நவ. 22: சிவகங்கையில் கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகம் மற்றும் நூலக நண்பர்கள் திட்டம் சார்பில் 57வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் திருஞானசம்பந்தம் தலைமை வகித்தார். மாவட்ட மைய நூலகர் முத்துக்குமார் வரவேற்புரையாற்றினார்.

நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நூலகத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். மேலும், மாணவ, மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அடையாள அட்டைகளையும், புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் நூல் சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன், நூலக நண்பர்கள் திட்டத்தை சார்ந்த தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் விருதாளர் ஈஸ்வரன், மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட மைய நூலகர் கனகராஜன் அவர்கள் நன்றி கூறினார்.

The post தேசிய நூலக வார விழா appeared first on Dinakaran.

Tags : National Library Week ,Sivagangai ,57th National Library Week ,Kaviyogi Sudtananda Bharati District Central Library ,Friends of Library Programme ,District Library Officer ,Thirunnasambandham ,District Central… ,National Library Week Festival ,Dinakaran ,
× RELATED பொன்னேரியில் 57வது தேசிய நூலக வார விழா: துரை சந்திரசேகர் எம்எல்ஏ பங்கேற்பு