×

ஈரோடு பவானியில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மறியல் போராட்டம்

 

பவானி,நவ.22: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்றம் வழக்கறிஞர் ஒருவரை வாலிபர் வெட்டியதை கண்டிக்கும் வகையில் பவானி வழக்கறிஞர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக பவானி – மேட்டூர் ரோட்டில் அமர்ந்து வழக்கறிஞர்கள் கண்டன கோஷம் எழுப்பினர்.

பவானி வழக்கறிஞர் சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர்கள் ப.பா.மோகன், ஆண்டவர், குமரேசன், பாலமுருகன், மோகன் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இப்போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post ஈரோடு பவானியில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Bar Association ,Erode Bhawani ,Bhavani ,Krishnagiri ,District ,Hosur Court ,Bhavani Lawyers Association ,Bhavani Integrated Court ,Mettur ,Erode Bar Association ,Dinakaran ,
× RELATED ஊத்துக்கோட்டையில் புதிய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்