×

திண்டுக்கல் கோயில் வாசலில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

திண்டுக்கல், நவ. 22: திண்டுக்கல்லில் நத்தம் ரோடு குடகனாறு விருந்தினர் இல்லத்திலிருந்து ரயில்வே குட்செட் செல்லும் வழியில் உள்ளது அந்தோணியார் கோயில். இதன் வாசலில் துணியில் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் பெண் குழந்தை கிடப்பதாக நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு விரைந்து சென்ற திண்டுக்கல் நகர் வடக்கு எஸ்ஐ விக்னேஷ்குமார், காவலர் மோகன் மற்றும் போலீசார் குழந்தையை மீட்டனர்.

தொடர்ந்து உடனே 108 ஆம்புலன்சை வரவழைத்து குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டு பிரிவில் உள்ள ஐசியுவில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குழந்தையை வீசியது யார்?, பெற்றோர் யார்?, தவறான உறவால் குழந்தை பிறந்ததால் வீசி சென்றனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டுக்கல் கோயில் வாசலில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை appeared first on Dinakaran.

Tags : Pachilam ,Dindigul temple ,Dindigul ,Natham Road ,Gudakanaru Guest House ,Railway Kuchset ,Antoniyar Temple ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி