×

நடைபயிற்சி சென்றபோது ரயில் மோதி மூதாட்டி பலி

தண்டையார்பேட்டை: திருவொற்றியூர் எஸ்.பி.கோயில் தெருவை சேர்ந்தவர் லதா (56). இவர், தினசரி காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் வாக்கிங் சென்று விட்டு வெகு நேரம் வீட்டிற்கு வராததால் அவருடைய மகன் வினோத் (35) அந்த பகுதியில் தேடிய போது கிடைக்கவில்லை.

இதனிடையே, ஒரு பெண் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக பொதுமக்கள் கூறினர். உடனே, வினோத் கொருக்குப்பேட்டை போலீசாரிடம் கேட்டபோது ஸ்டான்லி மருத்துவமனையில் உடல் இருப்பதாக கூறினர். அங்கு வந்து பார்த்துவிட்டு, அது தனது தாய் என்று கூறியுள்ளார். லதா தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி சம்பவ இடத்தில் உயிர் இழந்து உள்ளார் என்பது தெரியவந்தது.

The post நடைபயிற்சி சென்றபோது ரயில் மோதி மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Latha ,Tiruvottiyur SB Koil Street ,Vinod ,
× RELATED பிளஸ்1 பொதுத்தேர்வு இறுதிபெயர் பட்டியல் வெளியீடு அதிகாரிகள் தகவல்