×

மகாராஷ்டிரா மாஜி அமைச்சர் கொலையில் தொடர்புடைய பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் சிறையில் அடைப்பு

வாஷிங்டன்: பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான கும்பல் இந்தியாவின் பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் மிரட்டி பணம் பறித்தல், கொலை மிரட்டல், கூலிக்கு கொலை செய்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மும்பையில் கடந்த ஏப்ரல் மாதம் சல்மான் கான் வீட்டருகே துப்பாக்கி சூடு நடந்தது. இதில் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய் ஆகியோருக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மும்பையில் கடந்த 12ம் தேதி மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார் அணி) கட்சியின் மூத்த தலைவருமான பாபா சித்திக் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு அல்மோன் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றதால், அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். கடந்த 18ம் தேதி அல்மோன் பிஷ்னோய் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட அல்மோன் பிஷ்னோய் அயோவாவின் பொட்டவட்டமி கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் ெவளியாகி உள்ளன.

The post மகாராஷ்டிரா மாஜி அமைச்சர் கொலையில் தொடர்புடைய பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Lawrence Bishnoi ,Maharashtra ,Majhi Minister ,Washington ,Dada Lawrence Bishnoi ,Punjab ,India ,Mumbai ,Salman Khan ,Maji ,Minister ,
× RELATED மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான...