×

சில்லிபாயின்ட்…

* இத்தாலி வெற்றி
பெடரேஷன் கோப்பை எனப்படும் பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டியின் பெண்கள் பிரிவில் இத்தாலி அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஸ்பெயினில் நடந்த இறுதி ஆட்டத்தில் அந்த அணி சுலோவாகியா குடியரசை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

* சீனா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து, மாளவிகா பன்சூட், அனுபாமா உபாத்யாயா ஆகியோர் 2வது சுற்றுடன் வெளியேறினர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்/சிராக் இணை காலிறுதிக்கு முன்னேறியது.

* பெண்கள் பிக் பாஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஆடிய இந்திய விக்கெட் கீப்பர் யாஷ்டிகா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார். அதனால் ஆஸி-இந்தியா இடையிலான 3ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தொடர் டிச.5ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

The post சில்லிபாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Italy ,Federation Cup ,Billie Jean King Cup ,Slovakia ,Spain ,Sillypoint ,Dinakaran ,
× RELATED களைகட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை… படகு திருவிழாவில் பங்கேற்ற சாண்டாக்கள்!!