×

கலைஞர் கனவு இல்ல திட்டம் தொடக்கம்

ஸ்ரீபெரும்புதூர்: தமிழகம் முழுவதும் குடிசை வீடுகள் இல்லாத வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி குடிசை வீடுகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, அவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரும் இத்திட்டத்தின் மூலம், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு தற்போது வீடு கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வெங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இரும்பேடு கிராமத்தில் 3 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வீடு கட்டும் பணி நேற்று தொடங்கியது. வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் பூமிபூஜை நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற உறுப்பினர் எத்திராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post கலைஞர் கனவு இல்ல திட்டம் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Sriprahumutur ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வரும் ஏப்ரல் மாதம் முதல்...