×

அதானி நிறுவனத்துடனான இரு ஒப்பந்தங்கள் ரத்து: கென்யா அரசு அறிவிப்பு

அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதானி நிறுவனத்துடனான இரு ஒப்பந்தங்களை ரத்து செய்து கென்யா அரசு அறிவித்துள்ளது. மின் பகிர்பான ஒப்பந்தம், விமான நிலைய விரிவாக்க ஒப்பந்தம் ஆகியவற்றை ரத்து செய்வதாக கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ தெரிவித்துள்ளார்.

அதானி நிறுவனம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் விமான நிலைய விரிவாக்கம், மின் விநியோகம், அதன் கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களை பெற்று செயல்படுத்தி வந்தது. இந்த நிலையில் அமெரிக்க அரசு அதானி உள்ளிட்ட 8 பேர் மீது அரசு அதிகாரிகளுக்கு பல ஆயிரம் கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

அதேபோல், அமெரிக்க முதலீட்டாளர்களிடம் நிதிதிரட்டி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அதானி நிறுவனம், இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது. வழக்குகளை சட்டரீதியாகா அனுகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், 700 மில்லியன் டாலர் மதிப்பிலான மின்பகிர்மான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கென்யா அரசு அறிவித்துள்ளது.

The post அதானி நிறுவனத்துடனான இரு ஒப்பந்தங்கள் ரத்து: கென்யா அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Adani Company ,Government of Kenya ,United States ,Adani ,President ,William Rutto ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் பயங்கரம் பள்ளியில்...