×
Saravana Stores

ஒசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்டது தொழில்ரீதியானது அல்ல, தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது: ஐகோர்ட்

சென்னை: ஒசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்டது தொழில்ரீதியானது அல்ல, தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது என சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்ற நுழைவில் நேற்று வழக்கறிஞர் கண்ணன் என்பவரை ஆனந்தன் என்பவர் அரிவாளால் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே ஒசூரில் வழக்கறிஞர் கண்ணன் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக தலைமை நீதிபதி அமர்வில் பார் கவுன்சில் முறையீடு செய்தது. தலைமை நீதிபதி அமர்வில் இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன் முறையீடு செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; ஒசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்டது தொழில்ரீதியானது அல்ல, தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது. வழக்கறிஞர்கள் பாதுகாப்பு குறித்து அரசுடன் ஆலோசிக்க தலைமை வழக்கறிஞர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம். உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருடன் ஆலோசிக்க அரசு தலைமை வழக்கறிஞர் ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதி; வழக்கு விசாரணையை ஜன.23-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post ஒசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்டது தொழில்ரீதியானது அல்ல, தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Ozur ,iCourt ,Chennai ,Chennai ICourt ,Anandan ,Kannan ,Osur, Krishnagiri district ,Dinakaran ,
× RELATED வழக்கறிஞர்கள் பாதுகாப்பு குறித்து...