×

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல்..கிளினிக்கில் பணியாற்றிய டாக்டர்களுக்கு மாற்றுப்பணியிடம் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை : ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரி  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், ‘ஓமிக்ரான் கிருமியால் பெரிய பாதிப்புகள் இல்லாதவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். 2 முறை கொரோனா பரிசோதனையில் நெகடிவ் ரிசல்ட் வந்துவிட்டால் வெளியில் வரலாம். சென்னையில் 15 மண்டலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் உள்ளது.சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் ஆலோசனை வழங்க மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோவை, செங்கல்பட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றன.அம்மா மினி கிளினிக்குகள் ஓராண்டு அடிப்படையில் தற்காலிகமாகவே தொடங்கப்பட்டன. அம்மா மினி கிளினிக்குகளில் சிகிச்சை அளிக்கப்படவில்லை. செவிலியர்கள் கூட நியமிக்கப்படவில்லை. அம்மா மினிகிளினிக்கில் பணியாற்றிய 1,800 டாக்டர்களுக்கு மாற்றுப்பணியிடம் வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகளும் மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை வேப்பேரி பெரியார் திடலில் கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.1820 மருத்துவர்கள் தற்போது கொரோனா பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சென்னை மாநகராட்சியில் 22 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதுவரை 3.35 லட்சம் சிறார்களுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது,’ என்றார். …

The post 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல்..கிளினிக்கில் பணியாற்றிய டாக்டர்களுக்கு மாற்றுப்பணியிடம் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : 2000 ,Amma Mini Clinics ,Minister ,M. Subramanian ,Chennai ,People's Welfare ,2000 Amma Mini Clinics ,
× RELATED விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில்...