×

பள்ளி ஆசிரியருக்கு நூலக பராமரிப்பு விருது

நாகப்பட்டினம், நவ.21: நாகப்பட்டினம் கலெக்டர்அலுவலகத்தில் நடந்த தேசிய நூலக வாரவிழாவில் தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலக விருது ஆசிரியருக்கு வழங்கப்பட்டது. 57வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கும் விழா நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம் ஆசிரியர் பாலாஜி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி விருது வழங்கினார். கலெக்டர் ஆகாஷ், எம்எல்ஏக்கள் முகம்மதுஷாநவாஸ், நாகைமாலி, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மாவட்ட நூலக அலுவலர் ஜான்பாஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post பள்ளி ஆசிரியருக்கு நூலக பராமரிப்பு விருது appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,National Library Week ,Nagapattinam Collector's Office ,57th National Library Week ,Dinakaran ,
× RELATED குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 177 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை