×
Saravana Stores

ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய வாலிபர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணனை மற்றொரு வழக்கறிஞரின் உதவியாளர் அருவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால் வழக்கறிஞர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஓசூர் ஏரி தெருவை சேர்ந்தவர் வழக்கறிஞர் கண்ணன். ஒசூரில் பிரபல வழக்கறிஞர் சத்தியநாராயணாவிடம் இவர் ஜூனியராக வேலை பார்த்து வருகிறார். ஓசூர் நாமல் பேட்டையை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் வேறொரு வழக்கறிஞரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது.

ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் ஆனந்தகுமார் என்பவர் வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை அந்த பகுதியில் இருந்த மக்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். படுகாயமடைந்து கீழே விழுந்த கண்ணனை தொடர்ந்து அரிவாளால் வெட்டினார். இதில் வழக்கறிஞர் கண்னனுக்கு கழுத்து, தலை, முதுகு உள்ளிட்ட 5 இடங்களில் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்கறிஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பலத்த காயமடைந்த வழக்கறிஞருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அரிவாளுடன் நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்த ஆனந்த குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Hosur courthouse ,ARUVAL SHARAMARI ,KRISHNAGIRI DISTRICT OSUR COURT COMPLEX ,Kannan ,Hosur Lake Street ,Ozur ,Hosur court ,Dinakaran ,
× RELATED திருச்சியில் பயங்கரம் ஊசி மூலம் காற்றை செலுத்தி வாலிபர் கொடூர கொலை