×
Saravana Stores

நைஜீரியா, பிரேசில் பயணம் முடிந்தது; கயானா நாடாளுமன்றத்தில் மோடி உரை: நாளை டெல்லி திரும்புகிறார்


கயானா: நைஜீரியா, பிரேசில் பயணம் முடித்துக் கொண்டு இன்று கயானா நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் பிரதமர் மோடி, நாளை டெல்லி திரும்புகிறார். நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி கடந்த 16ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டார். முதல்கட்டமாக நைஜீரியாவின் தலைநகர் அபுஜா ெசன்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் அகமது டினுபுவை சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி, சுரங்கம், மருந்து உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. பின்னர் நைஜீரியாவில் இருந்து பிரதமர் மோடி பிரேசில் சென்றார். அங்கு நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அப்போது பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்தார். தொடர்ந்து நேற்றிரவு கயானா நாட்டுக்கு சென்றார்.

கடந்த 50 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் கயானாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமைந்தது. இந்த பயணத்தின்போது, இந்தியா- கரீபியன் சமுதாய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்திய நேரப்படி இன்று காலை கயானாவின் ஜார்ஜ்டவுனில் பிரதமர் மோடிக்கு சம்பிரதாய வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. அவரை கயானா ​அதிபர் முகமது இர்ஃபான் அலி வரவேற்றார். அவருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தது. பின்னர் கயானா நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். தனது கயானா பயணத்தை முடித்துக் கொண்டு, நாளை பிரதமர் மோடி டெல்லி திரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post நைஜீரியா, பிரேசில் பயணம் முடிந்தது; கயானா நாடாளுமன்றத்தில் மோடி உரை: நாளை டெல்லி திரும்புகிறார் appeared first on Dinakaran.

Tags : NIGERIA, BRAZIL ,MODI ,GUYANA ,DELHI ,Nigeria ,Brazil ,Guyana Parliament ,Nigeria, ,Dinakaran ,
× RELATED கயானாவுக்கு சென்ற பிரதமர் மோடி: இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு