×

மங்களூரில் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 பெண்கள் உயிரிழப்பு: சிசிடிவி வெளியீடு

கர்நாடகா: கர்நாடகா மாநிலம் மங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீச்சல் குளத்தில் மூழ்கி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைசூருவை சேர்ந்த இளம்பெண்கள் நிக்சிதா, பார்வதி, கீர்த்தனா உள்ளிட்ட 3 பேரும் விடுமுறை தினத்தை கழிப்பதற்காக மங்களூருவின் புறநகரில் உள்ள கடற்கரைக்கு சென்றனர்.அங்கு அமைந்துள்ள தனியார் ரெசார்ட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நீச்சல் குளத்தில் இறங்கி குளிக்க சென்றனர்.

முதலில் ஆழம் குறைந்த பகுதியில் இருந்துள்ளனர். பின்னர் ஆழமான பகுதிக்கு சென்று அங்கு நீச்சல் தெரியாமல் தத்தளித்ததும் தெரிய வந்துள்ளது.முதலில் ஒருவர் சென்றநிலையில் அவரை காப்பாற்ற அடுத்தடுத்து இரண்டு பெண்கள் சென்று 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்த காட்சி இத்தகைய சிசிடிவி மூலமாக தெரியவந்துள்ளது. இந்த நிகழ்வு விபத்து என்றாலும் நீச்சல் குளத்தை சுற்றி பாதுகாப்பு வசதிகள் இல்லை என்று நிலையை காரணம் காட்டி அந்த ரெசார்ட்டின் உரிமையாளரும், மேலாளரும் கைது செய்யப்பட்டனர்.

The post மங்களூரில் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 பெண்கள் உயிரிழப்பு: சிசிடிவி வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Mangalore ,Karnataka ,Mangalore, Karnataka ,Mysore ,Nikshita ,Parvati ,Kirtana ,
× RELATED போலீசாரை தள்ளிவிட்ட விவகாரம்...